ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் நினைவு வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் ஹாரூன், சோழவரம் திமுக ஒன்றிய அவைத்தலைவர் காசிம் முகமது, துபாயைச் சேர்ந்த சாகுல், மதுரையைச் சேர்ந்த ஆண்டவர் முகமது ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பயனாடை அணிவித்தனர். உடன் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி. (சென்னை, 10.02.2025)
தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ. நாத்திகன் தனது 71 ஆம் பிறந்த நாளையொட்டி (11.02.2025) , “பெரியார் உலகம்” நன்கொடையாக 5,000/- ரூபாயைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், நகரச் செயலாளர் சு.மோகன்ராஜ், கு. வைத்தியலிங்கம் மற்றும் சீனிவாசன். (சென்னை, 10.02.2025)